முகநூலில் அறிமுகமான காதலியைப் பார்க்க வந்த இடத்தில், டெம்போ டிராவலரைத் திருடிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்ஜினியரை சென்னை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகர் 6-வது அவென்யூவில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த டெம்போவேனை திருடிச் சென்ற புகார் தொடர்பாக விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, அப்துல் ஜலீல் என்ற கேரள இளைஞரை கைது செய்து டெம்போ வேனை மீட்டனர்.
விசாரணையில் முகநூல் மூலம் அறிமுகமான அண்ணா நகரைச் சேர்ந்த பெண்ணை கேரளாவை சேர்ந்த அப்துல் ஜலீல் தேடி வந்து திருமணம் செய்ய வற்புறுத்தியது தெரியவந்தது. அந்த பெண் திருமணத்திற்கு மறுத்த நிலையில், கையில் காசு இல்லாமல் டெம்போ வேனை திருடிச் சென்றதும் பின்னர் மனம் மாறி சென்னை விமான நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.