சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட Zero accident day விழிப்புணர்வால் கடந்த 5 நாட்களாக ஒரு விபத்து, ஒரு இறப்பு கூட நிகழவில்லை என சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் குமார் தெரிவித்தார்.
திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி சிறுவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேட்டியளித்த இராயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் தாமரைச்செல்வன், சென்னையை விபத்தில்லா நகராக மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.