சென்னை பாடி புதுநகர் பகுதியில் தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று அய்யப்பாக்கத்தை சேர்ந்த காளிதாஸ், சரித்திர பதிவேடு ரவுடியான மணிகண்டன் உள்ளிட்டவர்களுடன் மது அருந்தியுள்ளதாகவும், மணிகண்டனை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.