பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
கூடியுள்ள தொண்டர்களை நோக்கி கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார் பிரதமர்
பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் அண்ணாமலை
'மீண்டும் ஒரு முறை மோடி ஆட்சி' என்ற வாசகம் மேடையில் இடம்பெற்றுள்ளது
பிரதமருக்கு தென்னை மரம் ஏறுபவர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது
''நமது குடும்பம் மோடி குடும்பம்'' என பாஜகவினர் முழக்கம்
நமது குடும்பத்தின் உறுப்பினர் மோடியை தமிழக குடும்பத்தின் சார்பில் வரவேற்கிறோம்: எல்.முருகன்
பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
எப்போதெல்லாம் பிரதமர் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் புதிய திட்டங்களை வழங்குகிறார்: எல்.முருகன்
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 11 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய திட்டடங்களை பிரதமர் வழங்கியுள்ளார்: எல்.முருகன்
தமிழகத்திற்கு தமது குடும்பத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார் பிரதமர் மோடி: அண்ணாமலை
திமுகவினருக்கு கோபாலபுரத்தில் உள்ள குடும்பத்தினர் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்: அண்ணாமலை
ஒரு யோகியாக தமது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார் பிரதமர் மோடி: அண்ணாமலை
142 கோடி மக்கள் தான் பிரதமர் மோடியின் குடும்பம்: அண்ணாமலை
4ஆவது தலைமுறையாக அரசியலில் உள்ள குடும்பத்தினரை அரசியலை விட்டே அகற்ற வேண்டிய நேரமிது: அண்ணாமலை
மோடிக்கு காஞ்சி பட்டால் நெய்யப்பட்ட, சிறுத்தை அச்சிடப்பட்ட சால்வையை அணிவித்தேன்: அண்ணாமலை
வாய்ப்பேச முடியாத சிறுத்தைகளுக்கு பிரதமர் உதவி செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சால்வை அணிவிக்கப்பட்டது
தமிழகத்தில் இருந்து மோடியின் குடும்பமாக 39 எம்பிக்களை அனுப்பி வைக்க வேண்டும்: அண்ணாமலை
பேய்கள் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
அடுத்த 60 நாட்களுக்கு தவம் போல பாஜகவினர் பணி செய்ய வேண்டும்: அண்ணாமலை
அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளார் பிரதமர்: அண்ணாமலை