சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தண்ணீர் குடத்தின்மீது இடித்ததால் ஏற்பட்ட தகராறில் முனியம்மா என்ற பெண் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தில் கைதான கல்லூரி மாணவி வள்ளி மீதும் அவரது தாயார் சாந்தி மீதும் "கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவித்தவர்கள்" என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழியில் வைத்திருந்த தங்களது தண்ணீர் குடத்தின் மீது இடித்துவிட்டதாகக் கூறி தகராறு செய்த சாந்தியும் வள்ளியும் முனியம்மாவை கீழே தள்ளிவிட்டதாகவும் அப்போது அருகிலிருந்த கட்டை ஒன்றை எடுத்த வள்ளி, முனியம்மாவின் நெஞ்சுப் பகுதியில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.