முறையாக தூர்வாராத காரணத்தால் அடையார் ஆற்றின் முகத்துவாரம் மணல் திட்டுகளால் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகர் கடற்கரை இடையே அமைந்துள்ள அடையாற்றின் முகத்துவாரம், மணல் திட்டுகளால் மூடாதபடி இயந்திரங்கள் கொண்டு தூர்வாரப்பட்டு வருவது வழக்கம்.
இதன் மூலம், கடல் நீரும் ஆற்று நீரும் இணையும் பகுதியில் எந்தவித இடையூறும் இன்றி ஆற்றில் செல்லும் தண்ணீர் கடலில் கலக்கும்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாத காலம் மட்டுமே இருக்கும் சூழலில், அடையற்றின் முகத்துவாரம் மணல் திட்டுகளால் மூடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.கோரிக்கை