ஜல்லி உள்ளிட்ட கல்குவாரி பொருட்களில் ஏற்பட்டுள்ள செயற்கை விலை ஏற்றத்தை, அரசு தலையிட்டு குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற மாநில கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் திரிசங்கு, கல்குவாரியில் வழக்கமாக ஆயிரத்து 400 ரூபாய் வரை விற்பனை செய்து வந்த கற்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார்.