சென்னை ஐஐடி வளாகத்தில், ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், 19 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மூன்று அமர்வுகளாக நடைபெறும் இந்த கருத்தரங்கில், சீனா, இங்கிலாந்து உட்பட முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். வரும் 2-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில், உயர்கல்வி தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கருத்தரங்கில், ஐஐடி மாணவர்கள் உட்பட 300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.