சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை போக்கி நல் வழிப்படுத்துவதற்காக பழைய மற்றும் புதிய புத்தகங்களை சிறை அதிகாரிகள் தானமாக பெற்று வருகின்றனர்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறைத்துறையின் சிறப்பு அரங்கை பார்வையிட்ட இயக்குனர் பாக்கியராஜ் கைதிகளுக்காக தன்னிடம் உள்ள சில புத்தகங்களை தானமாக வழங்கினார்.
அரங்கிற்கு வந்து புத்தகங்களை தானமாக வழங்க இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே சிறைத்துறை கொடுத்துள்ள தொலைபேசி எண்களை (9941265748,7904281344,044-28521306,044-28521512) தொடர்பு கொண்டால் வீட்டிற்கே வந்து புத்தகங்களை பெற்றுக் கொள்வோம் எனவும் டிஐஜி முருகேசன் கூறினார்.
நொடிப் பொழுதில் கோபத்தால் செய்த தவறால் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுக்கு புத்தக வாசிப்பு மன அழுத்தத்தை போக்கி மனதை இலகுவாக்கும் என்பதால், இதுவரை 2000 புத்தகங்கள் தானமாக பெறப்பட்டுள்ளதாகவும் கண்காட்சி முடிவதற்குள் ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் தானமாக பெறுவோம் என நம்புவதாகவும் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்தார்