சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், கஞ்சா சோதனையின் போது, 2 இளைஞர்களிடமிருந்து கணக்கில் வராத 1 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அண்ணா நகர் மதுவிலக்குப் பிரிவு போலீசார், இன்று காலை சோதனை மேற்கொண்டிருந்த போது, ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் இறங்கிய இரண்டு பேரிடம் சோதனை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக், சூரஜ் என்பது தெரியவந்தது. பணத்தை நகை வாங்குவதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்த நிலையில், உரிய ஆவணம் இல்லாததால், பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.