சென்னை பெருங்குடியில் வாழை இலையை வெட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது வீட்டையொட்டி வளர்க்கப்பட்ட வாழைமரத்தில் இலைகளை வெட்டி உள்ளார். அப்போது வாழை இலையை உரசிய மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது.
இதில் மின்சாரம் தாக்கி வெற்றிவேல் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற 17 வயது மகன் ஷாமும் மின்சாரம் தாக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாழை இலை உரசி அறுந்து விழும் அளவிற்கு தரமற்ற பழைய மின்கம்பிகள் பொருத்தப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்