செல்போன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்களை ஆபாசமாக திட்டவும், புகைப்படங்களை மார்பிங் செய்யவும் தனியாக இண்டர்வியூ வைத்து 50 நபர்களை வேலைக்கு வைத்ததாக கடன் செயலி மோசடி கும்பல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளது.
செயலியில் கடன் பெற்றவர்களிடம் அதிக வட்டி கேட்டும், மார்பிங் படங்கள் அனுப்பியும் மிரட்டிய புகாரில் கைதான உத்தரபிரதேசம், ஹரியானாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
50க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட இந்த மோசடி கும்பலின் தலைவன் விகாஷ் பீகாரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.