பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் திரையரங்கில் ஆட்டம் போடுவது தொடர்பாக கஞ்சா குடிக்கிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை விபரீதமாகி இரு கொலையில் வந்து முடிந்திருக்கின்றது. அண்ணனை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக கொலையாளியின் அண்ணனை கொலை செய்த விஜய் ரசிகரின் விபரீத ரிவெஞ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை எம்.கேபி நகரை சேர்ந்த லோகேஷ் தனது கூட்டாளிகள்உடன் கடந்த ஏப்ரல் மாதம் 13 ந்தேதி பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க அம்பத்தூர் திரயரங்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு பாடலுக்கு எழுந்து ஆட்டம் போடும் போது அம்பத்தூர் அன்னை சத்தியா நகரை சேர்ந்த சண்முகம் தலைமையிலான விஜய் ரசிகர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. படம் முடிந்து திரையரங்கிற்கு வெளியே வந்தும் சண்டையிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ஏப்ரல் 24 ந்தேதி அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலைக்கு சென்ற லோகேஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக அன்னை சத்யா நகரை சேர்ந்த சண்முகம் உள்பட 14 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கொலையாளிகளில் பெரும்பாலான நபர்கள் ஜாமீனில் வெளி வந்த நிலையில் சம்பவத்தன்று பட்டபகலில் சண்முகத்தின் அண்ணன் கார்த்தி என்பவரை 4 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல காவல் நிலையம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் கண்ட அம்பத்தூர் போலீசார் எம்.கே.பி நகரை சேர்ந்த வெங்கடேஷ், பாலாஜி, விக்ரம் உள்ளிட்ட 9 பேர் கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீஸ்ட் படத்தில் தொடங்கிய மோதலால் தனது அண்ணன் சண்முகத்தை கொலை செய்த கார்த்தியை கொலை செய்யும் திட்டத்துடன் நோட்டமிட்டதாகவும், சகோதரனை இழந்தால் அதன் வலி என்ன ? என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காக அவனது அண்ணன் சண் முகத்தை தீர்த்துக்கட்டியதாக வெங்கடேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
திரைப்படங்களில் எவ்வளவோ நல்ல விஷ்யங்களை படத்தின்நாயகன் சொல்லி இருந்தாலும், கெத்து என்ற பெயரில் போதை அடிமைகளாய் வலம் வரும் ரசிக சில்வண்டுகள், பழிக்கு பழிவாங்கும் விபரீத காட்சிகளை மட்டும் சிந்தைக்குள் புகுத்தி கொலைவழக்கில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.