சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 11 பேரை கைது செய்த போலீசார், சுமார் 18 கிலோ கஞ்சாவையும், 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சென்ற போலீசார் அங்கு பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த கண்ணம்மா நாயுடு என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்க முயன்றதும் தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கொடுங்கையூரில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த ஒரு திருநங்கை, 2 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.