கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கிடைத்த முக்கிய ஆவணம் அடிப்படையில் சென்னை சிஐடி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிஐஜி முத்துசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த குடியிருப்பின் உரிமையாளர் நாகி ரெட்டி மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்ட் நடத்தி வந்த ஆண்டனி வெல்டிங்டன் ஆகியோரிடம் ஆவண விவரங்கள் குறித்து சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டு பங்களாவில் இருந்த பொருட்கள் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.