சென்னை புழுதிவாக்கம் அருகே மெட்ரோ ரயில் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக சில பணிகள் இரவிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், உள்ளகரம் பகுதியில் நள்ளிரவில் கழிவு நீர் பாதை அமைக்கும் பணியில் சேலத்தைச் சேர்ந்த ரவி என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். சுமார் 12 அடி ஆழ பள்ளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய ரவி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.