சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில், வாகன தணிக்கையின் போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற விக்னேஷை இரண்டு போலீசார் விரட்டி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதை அடுத்து வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று தனது உறவினர் சுரேஷுடன் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விக்னேஷ் ஆட்டோவில் வந்ததாகவும், கெல்லீஸ் சந்திப்பில் அவர்களை வழிமறித்து சுரேஷ் பழைய குற்ற வழக்கில் தொடர்புடையவர் என்பதால் விசாரித்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
அப்போது, விக்னேஷ் கத்தி மறைத்து வைத்திருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ய முயன்ற போது அவர் தப்பியோடியதால் விரட்டிச் சென்று பிடித்ததாக தலைமைச் செயலக காலணி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.