சென்னையில் வீடு ஒன்றின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெற்குன்றம் கெஜலஷ்மி நகர் பகுதியில் சிவகாமி என்பவரின் வீட்டின் முதல் தளத்தில் நான்கு பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த தளத்தில் சுவரில் மின் வயர்கள் பதிக்கும் பணி சரியாக முடிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், பணி செய்துக்கொண்டிருந்த ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு தவறுதலாக மின் வயரை தொட்டதாக சொல்லப்படுகிறது.
அவரை காப்பாற்ற முயன்ற மற்ற மூவருக்கும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மின்சார இணைப்பை துண்டித்து 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டனர்.