சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள மெட்ராஸ் புரசைவாக்கம் இந்து ஜனோபகார சாஸ்வத நிதி நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 90 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஆறு மாதக்காலமாக முதலீட்டாளர்களுக்கு வட்டித் தொகையை வழங்கவில்லை. நிறுவனம் கொடுத்த காசோலை பணமின்றித் திரும்பியுள்ளது.
இதுகுறித்து நேரில் சென்று கேட்டபோது, உரிய பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்டோர் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.