சென்னையை அடுத்த மாங்காட்டில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டனர்.
அதில் சிக்கராயபுரத்தை சேர்ந்த ராஜன், திருவண்ணாமலையை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.