சென்னை ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதையில் கண்கவர் வண்ண சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை எழில்மிகு நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றனர். சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவது தடை செய்யப்பட்ட நிலையில், அதனை மீறி ஒட்டிய சுவரொட்டிகளை அகற்றி வண்ண ஓவியங்களால் சுவர்கள் ரம்மியமாக மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை சுவர்களில், உழவு, வழிபாட்டுத்தலங்கள், சென்னையின் அடையாளங்கள் உள்ளிட்டவை சித்திரமாக வரையப்பட்டுள்ளன.
மழை காலத்தில் சுவர்களில் நீர் கசிவு ஏற்படும் என்பதால், அதற்கேற்ப நீர் கசிவதை தாங்கும் தரத்திலான பெயிண்ட், ஓவியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.