சென்னை செங்குன்றத்தில் உள்ள நாரவாரிக்குப்பம் பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 84 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தின் கிளை முறிந்து விழுந்து மின்கம்பம் சாய்ந்ததுடன், வீடு ஒன்றும் சேதம் அடைந்தது.
குடியிருப்புப் பகுதியில் உள்ள அரசமரத்தின் கிளை முறிந்து அங்குள்ள ஜோதி ராமன் என்பவரது வீட்டின் மீது விழுந்ததில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. மின்கம்பமும் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மரக்கிளையை அங்கிருந்து அகற்றினர்.