சென்னையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் வரும் ஆர்டரின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற நபரை தனிப்படை போலிசார் கைது செய்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வட சென்னை பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஜீவா என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கேட்பவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வந்தது தெரியவந்தது.