சென்னை நந்தம்பாக்கம் அருகே போக்குவரத்து தலைமை காவலரின் பணியை பாராட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மகள் டைரி ஒன்றை பரிசாக வழங்கினார்.
போக்குவரத்து தலைமை காவலர் சாலமன் சதீஷ், மணப்பாக்கம் சந்திப்பில் நாள்தோறும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் எப்போதும் உற்சாகத்துடன் வாகன ஓட்டிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர் பாஸ்கரபாண்டியனின் மகள் 6 வயதான மோனா மிர்தண்யா அவருக்கு பரிசு வழங்கியுள்ளார்.