சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில், அட்டாக்ஸியா நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த பெண் வெள்ளை புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆகான்ஷா என்ற 13 வயதான பெண் வெள்ளை புலி சில நாட்களுக்கு முன் உடல் சோர்வுற்று இருந்துள்ளது. மருத்துவக்குழு பரிசோதனை செய்ததில், அதுக்கு அட்டாக்ஸியா என்ற நரம்பு மண்டல பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி, கால்கள் பலவீனமாகி நடக்க முடியாமல் போனதோடு, 2 நாட்களாக சுத்தமாக சாப்பிடவும் முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு ஆகான்ஷா புலி கூண்டிலேயே உயிரிழந்துவிட்டது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கால்நடைத்துறை மருத்துவர்களின் தலைமையில் வெள்ளை புலியின் பிரேதபரிசோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.