சென்னை அசோக்நகரில் காவல் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.டி. செல்வம் காரை வழிமறித்து, அவரது பாதுகாவலரை பட்டக்கத்தியால் தாக்கிய வழக்கில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜே ஜே நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்த போது, காவலரை தாக்கிய நபரின் அடையாளங்களோடு ஒத்துப்போனதால் கேகே நகர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நேரில் சென்று விசாரணை நடத்தியதில் காவலரை தாக்கிய நபர் தான் என்பது உறுதியானது. இதையடுத்து பழைய குற்றவாளியான புருஷோத்தமன் என்ற அந்த நபரை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.