தங்களது நிலத்தையும் வீட்டையும் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, வயதான தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
போலீசார் அவர்களைத் தடுத்து நடத்திய விசாரணையில், புளியந்தோப்பு ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை - முத்தம்மா தம்பதி என்பது தெரியவந்தது.
அப்பகுதியில் 400 சதுர அடிக்கு நிலம் வாங்கி, அதில் குடிசை அமைத்து தங்கி வருவதாகவும் அந்த நிலத்தை பெருமாள் என்ற நபர் மோசடியான முறையில் பட்டா மாறுதல் செய்துகொண்டு தங்களை வெளியேறும்படி கூறி மிரட்டுவதாகவும் அவர்கள் கூறினர்.
தம்பதியை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.