சென்னை தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரி அருகே உள்ள வரபிரசாத் நகரில் குடியிருப்புப்பகுதிக்குள் நள்ளிரவில் 7 அடி நீளம் கொண்ட முதலை புகுந்தது.
முதலை தெருவுக்குள் ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்து நாய்கள் தொடர்ச்சியாக குரைத்துக்கொண்டிருந்ததால் வெளியே வந்து பார்த்த பொதுமக்கள் முதலை இருந்ததை கண்டு அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரை வரவழைத்து முதலையை பிடித்துச்செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஏரி அருகிலேயே இருப்பதால் முதலைகள் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருவதாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், முதலைகளை ஏரியில் இருந்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.