சென்னையில் செக்யூரிட்டி நிறுவனத்தில் 4 கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்த அதன் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
சாலிகிராமத்திலுள்ள புல்டையர்ஸ் என்ற செக்யூரிட்டி நிறுவனத்தை ஸ்ரீ நாதரெட்டி என்பவர் நடத்தி வருகிறார். தன்னுடைய சகோதரி மகனான ஸ்ரவன்குமார் என்பவரை நம்பிக்கையின் பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு மேலாளராக அங்கு பணியமர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் ஊழியர்களின் சம்பளம், ஜி.எஸ்.டி தொகை ஆகியவற்றில் 4 கோடியே 42 லட்ச ரூபாய் வரை ஸ்ரவன்குமார் கையாடல் செய்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்புப் பிரிவு போலீசார், ஆந்திராவில் வைத்து ஸ்ரவன்குமாரை கைது செய்தனர்.