சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பட்டப்பகலில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
சந்தைமேடு பாவேந்தர் தெருவை சேர்ந்த மணல் லாரி உரிமையளரான கணேஷ் என்பவர் நேற்று மதியம் தனது ஸ்கூட்டரை வீட்டு வாசலில் நிறுத்தி பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போயிருந்தது கண்டு போலீசில் புகாரளித்தார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞன் ஒருவன் ஸ்கூட்டரை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.