தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் இன்று மிதிவண்டியில் சென்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சிக்காகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிதிவண்டியில் செல்வது வழக்கம். அதேபோல் இன்று உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து மாமல்லபுரம் வரை மிதிவண்டியில் சென்றார். அவருடன் நண்பர்களும் பாதுகாவலர்களும் சென்றனர்.