சென்னை அடுத்த ஆவடியில், தோழிக்கு உதவுவதற்காக தம்பியின் ஆட்டோ ஆர்.சி.புக்கை அக்கா அடமானம் வைத்த நிலையில், அதனை மீட்டு தரக் கூறி தகராறில் ஈடுபட்ட தம்பி, அக்காளை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்ற அந்த பெண், தனது தம்பி ரியாஸுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் ஆட்டோ வாங்கி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், தனது தோழிக்கு உதவுவதற்காக, ரியாஸின் ஆட்டோவுக்கான ஆர்.சி.புத்தகத்தை அவருக்கு தெரியாமலேயே ஆயிஷா அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தெரிந்து ஆர்.சி.புத்தகத்தை மீட்டுத் தரக் கூறி ஆயிஷாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்த ரியாஸ், நேற்றிரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஆயிஷாவிடம் குடிபோதையில் தகராறு செய்ததோடு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
ஆயிஷா உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய ரியாஸை போலீசார் தேடி வருகின்றனர்.