சென்னை அம்பத்தூர் அடுத்த பாடியில் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை காட்டி நடுரோட்டில் காதலியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த சவேதாவும், அவருடன் கல்லூரியில் படித்த நவீன்குமார் என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பாடியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்த சவேதாவை பார்க்க வந்த நவீன்குமார் அவரது செல்போனில் இருந்த குறுஞ்செய்தியை காண்பித்து யார் அனுப்பியது என கேட்டு சாலையில் வைத்தே அவதூறாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சவேதா அளித்த புகாரில் நவீன்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.