தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் இல்லாமல் கூடுதல் திட்டங்களையும் செயல்படுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 1500 நபர்களுக்கு 3000 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் ஊக்கதொகையாக 1000 ரூபாயையும் முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிகம் பேசுவதை விட செயலில் நிரூபிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றார்.
தேர்தல் நேரத்தில் வழங்கிய 500 வாக்குறுதிகளில் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.