சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் பூச்சி மருந்து அடித்த ஊழியர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
துறைமுகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கண்டெய்னரில் ஏற்றி கப்பலில் கொண்டு செல்லப்படும் நிலையில், கப்பலில் ஏற்றுவதற்கு தாமதமானால், மாதக்கணக்கில் கண்டெய்னர்கள் அதே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
இதனால் கண்டெய்னர்களில் உள்ள பொருட்கள் பாதுகாப்பிற்காக தனியார் ஊழியர்கள் மூலம் பூச்சி மருந்து அடித்து பராமரிக்கும் பணி நடைபெறும். அந்த வகையில். இன்று வியட்நாம் செல்லும் கப்பலில் அனுப்ப சோளம் ஏற்றி வைத்திருந்த கண்டெய்னர் உள்ளே ராமசாமி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் பூச்சி மருந்து தெளிக்க சென்றனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் ஹைடிராலிக் கேட்டை திறந்து பார்த்த போது இருவரும் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக இருவரும் மீட்கப்பட்ட நிலையில், ராமசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஜெகதீசன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.