சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையின் வரலாற்றுச் சின்னங்களை தாங்கி நிற்கும் வகையில் 5000 சாலை பெயர் பலகைகளை மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை ,கவிஞர் பாரதிதாசன் சாலை , லஸ் தேவாலயம் சாலை உள்ளிட்ட சாலை பெயர் பலகைகளோடு சுமார் 150 முதல் 200 பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தலைமைச் செயலகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் தேவாலயம் போன்ற வரலாற்று நினைவுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.