தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நில அபகரிப்பை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவின் மூலம் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்று தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 251, நில அபகரிப்பு தொடர்பான புகார்களை தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்துள்ளனர். இதில் 4,461 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 1,782 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், சில வழக்குகளை மற்ற நீதிமன்றங்களுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.