சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கிய உத்தரவைப் பொங்கல் வரை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சந்தையில் உள்ள மைதானத்தைத் திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வணிகர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கச் சந்தை மேலாண்மைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 50 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக வணிகர்கள் சங்கம் தெரிவித்தது. 94 சென்ட் இடம் ஒதுக்கியதாகச் சந்தை மேலாண்மைக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.