நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதால் தான் அதிக பாதிப்பு ஏற்படவில்லை, என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ராணிமேரி கல்லூரியை சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5,500 மாணவிகளுக்கும் "கோவிட் அம்பாசிடர்" என்ற அடையாள அட்டை வழங்கப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.