சென்னையில் போர் நினைவு சின்னம் பொதுமக்கள் பார்வைக்காக 4 நாட்களுக்கு திறந்து வைக்கப்படும் என லெப்டினட் ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார்.
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில், அந்நாட்டு வீரர்கள் 93,000 பேர் இந்தியாவிடம் சரணடைந்த நிலையில், வங்கதேசம் தனி நாடானது. இந்த வரலாற்றின் 50-ம் ஆண்டு பொன்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னையில் வரும் 9-ம் தேதி வரை, போர் நினைவு சின்னம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படும் என்றும், செல்ஃபி எடுத்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் லெப்டினட் ஜெனரல் அருண் தெரிவித்தார்.
மேலும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ் ஊடகங்கள் மிக சரியான வகையில், செய்தியை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி, என்றும் லெப்டினட் ஜெனரல் அருண் குறிப்பிட்டார்.