சென்னையில் போதை ஸ்டாம்ப்புகளை விற்றதாக கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய ரூபாயை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி போதை ஸ்டாம்ப்புகளை வாங்கியது தெரியவந்துள்ளது.
கொரட்டூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒருவனைப் பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, போதை ஸ்டாம்ப்புகள் வைத்திருந்தது தெரியவந்தது.
கல்லூரி மாணவனான அந்த நபர் மூலம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர்.
இவர்களில் ரோஹித் என்பவன் இந்திய ரூபாய்களை அமெரிக்க டாலர்களாக மாற்றி, பின்பு கிரிப்டோகரன்சியாக மாற்றி, அதன் பின் ஆன்லைன் செயலி ஒன்றில் போதை ஸ்டாம்புகளை ஆர்டர் செய்து வாங்கியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.