ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் தொடர்புடைய 2 தென்கொரியர்கள் வீட்டுக்காவலில் இருந்து தப்பிச் சென்றது தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஜி.எஸ்.டி. வரியாக 40 கோடியே 37 ஆயிரம் ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தவில்லை என அதன் உயரதிகாரிகளான யோங் சுக், ஜோவான் 2019ஆம் ஆண்டில் கைதாகினர். இதனை அடுத்து ஜாமீன் பெற்ற அவர்களை ஓரகடத்தில் உள்ள வீட்டிலேயே காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்திருந்தது.
இந்நிலையில், கடந்த அக்டோபரில் இருவரும் தப்பியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கி, அறிக்கையை ஜனவரி 25ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.