சென்னை லயோலா கல்லூரியில் கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட்போன் மோகத்தில் மூழ்கியுள்ள மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏறபடுத்தும் விதமாக, மாணவர்களிடமிருந்து ஒருநாள் முழுவதும் செல்போனை வாங்கிவைத்து ’ஸ்கிரீன்லெஸ்’ என்ற சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
விடுமுறை தினமென்பதால் இதில் பங்குபெற்ற 18 வயதிற்குட்பட்ட விடுதி மாணவர்கள் பல்வேறு புறச்செயல்பாடுகளில் கலந்துகொண்டனர். மேலும், மாணவர்களுக்கு டிஜிட்டல் உலகில் செலவிடும் நேரத்தை குறைத்து, கல்வியின் மீது கவனத்தை செலுத்துவது எப்படி என்பது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.