வரும் 18ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் சனிக்கிழமையன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.