சென்னை வண்ணாரப்பேட்டையில் துணிக்கடையில் புகுந்து, ரவுடி எனக் கூறி ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை, போலீசார் சிசிடிவி பதிவின் மூலம் தேடி வருகின்றனர்.
குருவப்பா தெருவில் கார்த்திக் என்பவர் 69 என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் கடையில் தனியே இருந்த பிரபு என்ற ஊழியரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி ஆடைகளை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசில் சிசிடிவியை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது ரவுடி லொட்டை மணி என்பதை உறுதி செய்தனர்.