முத்தியால்பேட்டையில் வீடு வாங்கித் தருவதாக போலி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கி 12 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த முனியசாமியிடம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 4 வீடுகள் வாங்கித் தருவதாக, 12 லட்ச ரூபாய் பெற்று போலி ஆணை வழங்கி 4 பேர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
முனியசாமி அளித்த புகாரில், மோசடியில் ஈடுபட்டதாக சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜெகதீஷை தேடி வருவதாக தெரிவித்தனர்.