சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் திடீரென 5 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர்.
எண்ணூர் விரைவு சாலை தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இந்த பள்ளம் தோன்றியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் கழிவுநீர் தொட்டி அருகே உள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகிஇருக்கலாம் என்று தெரிவித்தனர்.