சென்னையில் பரபரப்பான மேம்பாலத்தின் மீது இரு சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் தீடிரென வண்டியை நிறுத்தி விட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பலத்த காயமடைந்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கிருஷ்ணமாச்சாரி மேம்பாலம் வழியாக சென்ற ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணன் மேம்பாலத்தின் மீதிருந்து கீழே குதித்ததார்.
அவரை உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 45 வயது மதிக்கத்தக்க அவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த விஜய் கிருஷ்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.