புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கான காப்பீடு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் பேசிய அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரகாஷ், இந்தியாவில் ஆண்டுதோறும் 50,000 குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், முதல் முறை புற்று நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் குழந்தைகள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் பயனடையலாம் என்றும் தெரிவித்தார்.