வரத்து குறைந்ததால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய 450 லாரிகளில் 160 லாரிகள் மட்டுமே வருகிறதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக விலையும் இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.